தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான செயற்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகைள் உள்ளிட்டவற்றிற்கு தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்று அரசியலமைப்பு நிபுணர் ஓய்வுநிலை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கி நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் தனது இரு ஆண்டுகால ஆட்சியில், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத சில பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலாவது, ஊழல்களைக் கண்டறிந்து வழக்குத் தொடர்வது. இரண்டாவது, அரசியல் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பது. மூன்றாவது, போதைப்பொருள் ஒழிப்பு.

எதிர்த்தரப்பினரின் அச்சம்

  இந்த மூன்று விடயங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தற்போதைய கூட்டு எதிரணியில் அல்லது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளில் உள்ளவர்களாவர். அரசாங்கத்தின் அதிரடியில் சிக்கும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! சதிகளின் பின்னணியில் ரணில்.. | Ranil Behind The Conspiracies Of Opposition   ஒரே குழுவினரே இவ்வாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள். எனவே, தான் தொடங்கிய இந்த மூன்று பணிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. ஏனெனில், இதற்கு எதிராக எதிர்த்தரப்பினர் பாரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதைத் தடுப்பதே அவர்களின் இலக்காகும்.   அவர்கள் இந்த அரசாங்கத்துக்குத் தடை ஏற்படுத்தும் ஒரு வழியாக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது எந்தவொரு சுயாதீனக் குடிமகனுக்கும் தெளிவாகத் தெரியும். கடைசியாக உள்ள காலத்தில், நீதவான் நீதிமன்றங்கள் முதற்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு சூழல் காணப்பட்டது. அதைக் கண்டு எதிர்த்தரப்பினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

பின்னணியில் ரணிலா..

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய கொள்கை சார்ந்த செயன்முறைகளான ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகள், போதைப்பொருள் எதிர்ப்பு ஆகிய மூன்றுக்கும் தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியின் புதிய தந்திரமாகும். அரசாங்கத்தின் அதிரடியில் சிக்கும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! சதிகளின் பின்னணியில் ரணில்.. | Ranil Behind The Conspiracies Of Opposition   அது வெற்றியடையுமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் இப்போது புதிதாகத் திறந்துள்ள முன்னணிதான் நீதிமன்றமாகும். அரசாங்கத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளது. எதிர்க்கட்சிக்கு அது இல்லை. அதைப் புரிந்து கொண்ட எதிர்க்கட்சி இப்போது நிறுவன ரீதியாகச் செயல்படுகிறது. அது ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் உருவான ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். அதாவது, அரச அமைப்புக்குள் ஒரு நெருக்கடியை உருவாக்குவது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபையை ஒரு பக்கத்திலும், நீதிமன்றத்தை மறுபக்கத்திலும் நிறுத்தி ஒரு பிரச்சினையை உருவாக்குவதே இங்கு எதிர்க்கட்சியின் நோக்கமாகத் தெரிகிறது. அது குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எனது உணர்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.