அரசுக் காணி மோசடி வழக்கு: மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை
Ad Space
Ad Space
முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இரு முன்னாள் அமைச்சர்கள் உட்பட அனைத்து பிரதிவாதிகளுக்கும் இன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோரும் வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, அனைத்து பிரதிவாதிகளையும் பிணையில் தொடர அனுமதித்து, வழக்கை மார்ச் 27ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
Ad Space
Ad Space