தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் தபால் வாக்கு சீட்டு கிடைக்காததால், வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்.23.ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் சுமார் 3.40 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான விருப்பம் தெரிவிக்கும் படிவம்-12ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்பட்டது.
இதேபோன்று, வாக்குச்சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளும் சுமார் 1.90 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித் திருந்த நிலையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று, வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் பணியில் ஈடு படும் போலீஸார் மற்றும் நுண் பார்வையாளர்களும் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் நடந்த பயிற்சிக்கு வந்தவர்கள் தபால் வாக்கு செலுத்த கேட்டு அவர்களுக்கு அந்தந்த பயிற்சி வகுப்பு அறையில் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அங்கு வழங்கப்படாமல். எந்த அறிவிப்பும் இல்லாமல் பள்ளியின் முன்புறத்தில் 2 அறைகளில் தபால் வாக்கு செலுத்த ஒதுக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு வாக்களிப்பது என தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்படாததால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்றதுடன், பயிற்சிக்கு வந்த அரசு ஊழியர்கள் அலைக் கழிக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது, பல அரசு ஊழியர்கள், படிவம் 12-ஐ பூர்த்தி செய்து கொடுத்தும் அவர் களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்கப்படவில்லை. அதற்கு சரியான விளக்கத்தையும் அதிகாரிகள் வழங்கவில்லை.
இதேபோன்று தமிழகத்தில் பல சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சினை இருந்ததாகவும் இதனால் வாக்களிக்க முடியாமல் அரசு ஊழியர்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space