அரச சேவை இடமாற்றங்கள் ஏப்ரல் 02 முதல் அமுல்
Ad Space
Ad Space
2026ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செயற்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்றங்களும் குறித்த திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகளின் முடிவுகள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த முடிவுகள் அரச சேவை ஆணைக்குழுவின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளைப் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் குறித்த திகதியில் புதிய பணியிடத்தில்; கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானம் வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space