அவசரகாலச் சட்டத்தில் முறைகேடு இல்லை யாம்!
Ad Space
Ad Space
அவசரகாலச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நேற்று(06.01.2026) முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
மாறாக கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும்.
இதற்குரிய பணிகளை அரச அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர். அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகவுமே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space