அவசர விவாதத்தை நடத்த ஆளுந்தரப்பு மறுப்பு - சபையில் அமைதியின்மை
Ad Space
Ad Space
நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையீடு செய்யும் வகையில் அவசர விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அவசர விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சியினர் முன்னதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையிலேயே இன்று (23) பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட இந்த அமைதியின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space