அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு ; 'லொகு பெட்டி'யின் சகோதரர் 'பொடி பெட்டி' இலக்கு!
Ad Space
Ad Space
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லொகு பெட்டி' என்பவரின் சகோதரரான 'பொடி பெட்டி'யைக் குறிவைத்து அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (16) இரவு 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'பொடி பெட்டி' என அழைக்கப்படுபவர் நேற்று இரவு ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இனந்தெரியாத நபர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் “பொடி பெட்டி”க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அஹுங்கல்ல பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
Ad Space
Ad Space