அ.தி.மு.க.வில் இணைந்த லீமா ரோஸ்க்கு முக்கிய பொறுப்பு வழங்கிய இ.பி.எஸ்
Ad Space
Ad Space
சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அ.தி.மு.க.வில் இணைந்தார்.இந்நிலையில் அவருக்கு அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை கடந்தாண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது
Ad Space
Ad Space