ஆடிக் கார்த்திகை நாளில் காண்பிய விரிப்புக் காணும் நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
Ad Space
Ad Space
அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக் கார்த்திகை நன்னாளான எதிர்வரும் வியாழக்கிழமை(06.08.2026) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல்- 12 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.
இதனை முன்னிட்டு அன்று முற்பகல்-10.30 மணிக்குச் சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன் நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும். அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல்- 12 மணிக்கு எம் பெருமானுக்காக அழைத்து வரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாகப் புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் நல்லூரான் வடக்கு வாசல் வளைவு காண்பிய விரிப்புக் காணும்.
Ad Space
Ad Space