ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான குனார் மாகாணத்தில் உள்ள இடைநிலைப் பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (28) ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஏழு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 97 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டு நங்கர்ஹார் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் குனார் - நூரிஸ்தான் வீதிப் புனரமைப்புப் பணிகள் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக குறித்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே வெடித்துச் சிதறியதில் இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.