திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் செங்​குன்​றம் மற்​றும் அதனை ஒட்​டியுள்ள புழல் ஊராட்சி ஒன்​றிய பகுதி​கள், சென்​னையை ஒட்​டியுள்ள பகுதி​களாகும். இப்​பகுதி​களில் புதிய குடி​யிருப்​பு​கள் தொடந்து கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், செங்​குன்​றம் அருகே புள்​ளிலைன் ஊராட்​சிக்கு உட்​பட்ட புதுநகர், ஆருண் உல்​லாச நகர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் மணல் யார்​டுகளில் பழவேற்​காடு மற்​றும் காட்​டுப்​பள்ளி கடற்​கரை பகுதி​களி​லிருந்து, சட்​ட​விரோத​மாக கடற்​கரை மணலை எடுத்து வந்து, தரம் குறைந்த ஆற்று மணலுடன் கலந்து விற்​பனை செய்​யப்​படுவ​தாக சமூக ஆர்​லர்​கள் மற்​றும் பொது​மக்​கள் தரப்​பில் புகார் கூறப்​படு​கிறது.

இந்த புகாரை தொடர்ந்து, நேற்று கனிமவளத் துறை அமைச்​சர் டி.கே.பிரபு, புள்​ளிலைன் ஊராட்​சிக்கு உட்​பட்ட புதுநகர், ஆருண் உல்​லாச நகர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் சில மணல் யார்​டுகளில் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார்.

இந்த ஆய்​வில், “காட்​டுப்​பள்ளி பகுதி​யி​லிருந்து உரிய அனுமதி​யின்றி, கடற்​கரை மணல் எடுத்து வரப்​பட்டு, மலை போல் மிகப்​பெரிய அளவில் இருப்பு வைக்​கப்​பட்​டிருந்​ததும், அந்த மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்​பனை செய்​யப்​பட்​டதும்” தெரிய வந்​துள்​ளது.

இதையடுத்து, அமைச்​சரின் உத்​தர​வின் பேரில், அதி​காரி​கள், கலப்​பட மணல் விற்​பனை​யில் ஈடு​பட்டு வந்த 15 மணல் யார்​டுகளுக்கு ‘சீல்’ வைத்​தனர். மேலும், தொடர்​புடைய​வர்​கள் மீது உரிய சட்ட நட​வடிக்கை மேற் ​கொள்ளும் பணிகளில் அதி​காரி​கள் ஈடு​பட்டுள்ளனர்.