இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கலாசாரத் தொடர்புகளையும் நாமல் நினைவு கூர்ந்தார்.
விளையாட்டுத் துறையில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவித்தார்.
தலைமைத்துவம் என்பது பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை என மாணவர்களிடையே நாமல் கூறினார்.