இரத்மலானை ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் இரண்டு கைக்குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீசப்பட்ட இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிக்காமல் இருந்த இரண்டாவது கைக்குண்டை பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறியவும் பொலிஸார் விசேட விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space