மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (28.04.2026) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த விசேட காலநிலைப் பாதிப்பு குறித்த எச்சரிக்கையானது, இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்க பொது மக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும்.
மின்னல் தாக்கத்தின் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் ஏனைய மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மரங்கள் அல்லது மின்கம்பங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்.
இதேவேளை, அவசர காலங்களில் பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இரவு 11.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space