இலங்கை இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட 161 இலட்சம் மதிப்புள்ள 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு (CID) அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத்திணைக்களம் (CID) இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகமவிடம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த 10,000 தங்கப்பொருட்கள் தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்பில் உள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த 10,000 தங்கப்பொருட்களின் எடையை அளவிட சுமார் ஒரு வருடம் ஆனது என்றும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
மேலும், தங்கப்பொருட்கள் குறித்து நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தங்கப் பொருட்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பி, நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி முந்தைய நீதிமன்ற அமர்வில் உத்தரவிட்டிருந்தார்.
விடுதலைப்புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து இந்த தங்கப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு, தற்போது இராணுவப்புலனாய்வு பணியகத்தின் காவலில் உள்ள நிலையில், அவற்றை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆணையத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி, அறிக்கை கோருமாறு முந்தைய நீதிமன்ற விசாரணையில் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப்பொருட்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space