மாத்தளையில் உள்ள இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பெருமதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தளை கவட்டியாமுனை ராஜமகா விகாரையின் சைத்தியத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற சூடாமணியும், அதிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பலாபத்வெல ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தில் தெய்வ விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி மற்றும் இரத்தினக் கற்களால் ஆன ஆபரணங்களுமே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை வேளையில் இந்த இரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த கவட்டியாமுனை ராஜமகா விகாரையின் சைத்தியத்தில் காணப்பட்ட சூடாமணி, வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருளியல் மற்றும் ஆன்மீக மதிப்பைக் கொண்ட ஒன்றாகும்.

பலாபத்வெல ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் விக்கிரகத்தைச் அலங்கரித்திருந்த கோடிக்கணக்கிலான/விலைமதிப்பற்ற தங்க, வெள்ளி மற்றும் இரத்தின ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளன.

இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்கும், திருடப்பட்ட புனிதப் பொருட்களை மீட்பதற்கும் மாத்தளை பொலிஸார் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.