மேலும், 45 நிமிடங்களுக்குள் மீள்மின்சாரம் (rapid recharging) செய்யக்கூடிய வசதி மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை உள்ளூர் செலவில் வழங்கும் திறன் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களாகக் காணப்படுகின்றன.
இலங்கை விமானப் போக்குவரத்து துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை
Ad Space
Ad Space
இலங்கை விமானப் போக்குவரத்து துறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை எட்டியுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக உள்ளூரில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட eVTOL (மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம்) விமானம் தற்போது 100 கிலோ கிராம் பாரம் கொண்டு பாதுகாப்பு மற்றும் தன்னியக்க (autonomous) செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கான கிலோமீட்டர் செலவு ரூ. 40க்கும் குறைவாக மலிவு வான்போக்குவரத்தை வழங்குவதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space