விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையும் இணைந்து நான்காம் கட்டமாக முன்னெடுக்கும் பிளாஸ்ரிக் ஒழிப்புச் செயற்திட்ட நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) காலை-07.30 மணியளவில் யாழ்ப்பாணம் இளவாலைக் கிராமிய மருத்துவமனையில் ஆரம்பமாகி இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் வரை நடாத்தப்படவுள்ளது.

குறித்த செயற்திட்ட நிகழ்வில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைப் பிளாஸ்ரிக் அற்ற பிரதேசமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.