தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்லாமிய போர்வீரர்களின் பதிலடி விரைவில் வரவுள்ளது என்று ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் எச்சரித்துள்ளார்.
ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (SNSC) செயலாளரான முகமது பாகர் சோல்காத்ர் (Mohammad Bagher Zolghadr), லெபனானை ஈரானின் உயிரோட்டம் (lifeblood) என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஈரானிய குடியரசின் சிவப்புக்கோடுகளை மீறுவதை எவ்விடத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எட்டப்படும் எந்தவொரு உடன்படிக்கையிலும், லெபனானில் நடக்கும் போர்நிறுத்தப்படுவதும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் ஈரான் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தத்திற்குப் பிறகு, ஜூன் 7 - 8 ஆகிய திகதிகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பரஸ்பரம் நடத்திய தாக்குதல்களே மிகக் கடுமையான மோதலாகப் பார்க்கப்படுகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடக்கத்தில் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியத் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space