இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு: சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை
Ad Space
Ad Space
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தை குறுகிய வீதியில் கவனயீனமாக செலுத்தி நபரொருவரின் மரணத்திற்கு காரணமான வழக்கில், கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ரூ.15,000 அபராதமும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Ad Space
Ad Space