ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். அதற்காக ஏற்கெனவே ஒரு போர்க் கப்பலை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானும் எச்சரித்தது.
ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space