ஈரான் தொடர்பான போர்நிலையை நிறுத்தக்கூடிய ஒரே தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே எனவே, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கெய்ரோவில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய அவர், போர் காரணமாக உலகளவில் எரிசக்தி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து வருவதாக எச்சரித்தார். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரைத் தாண்டும் அபாயமும் உண்மையானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் உலக பொருளாதாரத்துக்கும் உணவு விநியோகத்துக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் போரை நிறுத்த டிரம்பிடம் எகிப்து ஜனாதிபதி அவசர கோரிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space