ஈழத்தின் நவீன கவிதையின் முன்னோடியான மகாகவி ருத்ரமூர்த்தி அவர்களின் புதல்வரும், சமகாலத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய கவிஞர்களில் ஒருவருமான சேரன் காலமானார்.
யாழ்ப்பாணம் - அளவெட்டியில் பிறந்த இவரது முதலாவது கவிதை 1972-ஆம் ஆண்டு வெளியானது. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிர இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர், ஈழத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் அரசியல் ஊடகவியலாளராகவும் தடம் பதித்திருந்தார்.
பின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த அவர், அங்குள்ள வின்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.