மகா கும்பாபிஷேகக் கிரியைகள் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை (02.07.2026) முற்பகல்-10 மணியளவில் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பமாகியது. சனிக்கிழமை (04.07.2026) நண்பகல்-12 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் நடைபெறும். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறுமென ஆலயத் தர்மகர்த்தா சுந்தரலிங்கம் குகநேசன் தெரிவித்துள்ளார்.

