உக்ரைனில் உள்ள ஒரு பேருந்து தரிப்பிடத்தை இலக்குவைத்து ரஷ்யா நடத்திய வான்வழிக் ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்களில் 33 பேர் உயிரிழந்ததாகவும் 18 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை (8) காலை 10 மணியளவில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிரமடோர்ஸ்க் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் வேளையில் இரண்டு பேருந்துகள் இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அந்த பேருந்துகள் தாக்கப்பட்டதில் அவை தீயில் எரிந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏவுகணைத் தாக்குதலால் முழுவதுமாக எரிந்த பேருந்து ஒன்றின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று ரஷ்யா பொதுமக்களை இலக்குவைத்து நடத்திய தாக்குதல் மிகப் பெரிய பாதிப்பினை உக்ரைனில் ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பகுதி ஆளுநர் வாடிம் ப்ளாஷ்கின் கூறுகையில், ஒரே தாக்குதலில் அதிகம் பேரை கொல்லக்கூடியதாக இருக்கும் என்பதற்காகவே பயணிகள் பேருந்துகள் இலக்குவைக்கப்பட்டுள்ளன என்றார்.