உணவகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையிட்ட கும்பல் கைது!
Ad Space
Ad Space
கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் கும்பல் ஒன்று முகத்துவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட கும்பலில் மூன்று பெண்களும் ஐந்து ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space