உலகத்தையே கட்டுப்படுத்துபவர் போல பல்வேறு நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது.
ஆம், எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகள் எடுத்துவரும் ட்ரம்பை, ஈரான் விடயத்தில் கைவிட்டுள்ளன பல நாடுகள்.
அதனால், கடுப்பிலிருக்கும் ட்ரம்ப், தன் கோபத்தை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.ஆம், ஈரான் விடயத்தில் அமெரிக்காவுக்கு உதவிக்கு வராததால் பிரித்தானிய பிரதமரை மிரட்டியுள்ள ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானை கேலி செய்துள்ளார். ஈரான் விடயத்தில் பல நாடுகள் ட்ரம்பை கைவிட்டுவரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரானும், ஈரான் பிரச்சினையில் எங்களுக்குப் பங்கில்லை.
ஆகவே, தற்போதைய சூழலில், ஹோர்மூஸ் ஜலசந்தியை மீட்கும் ஆபரேஷன்களில் பிரான்ஸ் பங்கேற்காது என்று கூறியுள்ளார்.
என்றாலும், நிலைமை அமைதியாகும் பட்சத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து ஹோர்மூஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு தொடர்பில் உதவத் தயாராக இருக்கிறோம் என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.
மேக்ரானின் பதிலால் எரிச்சலடைந்துள்ள ட்ரம்ப், நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், நமது நடவடிக்கைகளுக்கு நமது நேட்டோ கூட்டாளர்கள் ஆதரவாக இருந்தார்கள்.
ஆனால், நாம் அவர்களுக்கு உதவி செய்தும் கூட, நமக்கு உதவி செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. நேட்டோ முட்டாள்தனமான தவறைச் செய்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்போது, மேக்ரானின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அவர்தான் சீக்கிரம் பதவியிலிருந்து வெளியேறிவிடுவாரே, அப்புறம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
2027ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு முறை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்ட மேக்ரான், அடுத்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space