மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய பிரமராசா பிரணீதன் என்ற சிறுவன், உயிருக்கு ஆபத்தான தலசீமியா (Thalassemia) நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவசர எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரியுள்ளார்.

குறித்த சிறுவன் இரத்தம் செலுத்தும் சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுவரும் நிலையில், அவருக்கு இரத்த உருவாக்கும் மூலச் செல் மாற்று அறுவை சிகிச்சை (Hematopoietic Stem Cell Transplant) மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவில் எதிர்வரும் சிகிச்சைக்காக 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி அனுமதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

சிறுவனின் 8 வயதுடைய சகோதரி பிரமராசா துஷானிகா, இச்சிகிச்சைக்கான நன்கொடையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிகிச்சைக்காக சுமார் 50 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் கிடைக்கப்பெறாத Pre-chimerism மற்றும் Chimerism பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மாத்திரம் சுமார் 10 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் தாயான துரைசாமி ருபாசினி, தமக்கும் இதய நோய் பாதிப்பு உள்ளதாகவும், மகனின் சிகிச்சைக்கான பெருந்தொகைப் பணத்தைத் திரட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு நகர ரோட்டரி கழகமும் சிறுவனின் சிகிச்சைக்கான நிதியைத் திரட்டுவதற்கு முன்வந்துள்ளது.

சிறுவனின் சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் தாயின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது ரோட்டரி கழகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கோ நிதி உதவிகளை வழங்க முடியும். 

தாயின் வங்கிக் கணக்கு விபரம்: வங்கி: இலங்கை வங்கி கிளை: செங்கலடி கணக்கின் பெயர்: D. Rubasini கணக்கு இலக்கம்: 94419249

ரோட்டரி கழகத்தின் வங்கிக் கணக்கு விபரம்: வங்கி: மக்கள் வங்கி கிளை: மட்டக்களப்பு கணக்கின் பெயர்: Rotary Club of Batticaloa City நடப்புக் கணக்கு: 075100180068834 சேமிப்புக் கணக்கு: 075200160068834

மேலதிக தொடர்புகளுக்கு: சிறுவனின் தாய்: 0741683937 (இலக்கத்தை உறுதிப்படுத்தவும்) ரோட்டரி கழகத் தலைவர்: 0777585941 செயலாளர்: 0775736423 பொருளாளர்: 0773764439

சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் இந்த அவசர சிகிச்சைக்காக உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி, மனிதநேயத்துடன் கைகொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery

Gallery