உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியைகள் இன்று!
Ad Space
Ad Space
நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த, ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை (02) பிற்பகல் நடைபெறவுள்ளன.
கடந்த 30ஆம் திகதி இவர் தனது வீட்டின் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த விசாரணைக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (01) வெளியிட்ட அறிக்கையில், அவரது மரணம் அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் காரணமாக நிகழ்ந்த ஒரு தற்கொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷ, பணி இடைநீக்கம் செய்யப்படும் போது நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space