உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் (WWE) உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரரும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான பிரான்சன் ரீட் (ஜெர்மைன் ஹேலி - Jermaine Haley) தனது 38ஆவது வயதில் காலமானார்.
மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக WWE நிறுவனம் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. எனினும், அவரது மரணத்திற்கான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னாள் NXT வட அமெரிக்க சம்பியனான இவர், கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற 'ஆண்ட்ரே தி ஜெயண்ட் மெமோரியல் பேட்டில் ராயல்' (André the Giant Memorial Battle Royal) போட்டியிலும் வெற்றி பெற்றவராவார்.
கடந்த நவம்பர் 6ஆம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற 'WWE Crown Jewel' போட்டியே அவர் இறுதியாகப் பங்கேற்ற நிகழ்வாகும்.
அவரது விலா எலும்புகள் சில முறிந்ததுடன், சிறுநீரகத்திற்கும் காயம் ஏற்பட்டிருந்தாகவும், இதன் காரணமாக மேலதிக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் சவூதி அரேபியாவில் தங்கியிருந்தார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த பிரான்சன் ரீட்டுக்கு கர்ப்பிணி மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். அவரது திடீர் மறைவுக்கு உலகளாவிய மல்யுத்த வீரர்களும் ரசிகர்களும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.