உலகம் முழுவதும் பல இடங்களில் Youtube தளம் முடக்கம்!
Ad Space
Ad Space
பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் செயலியான யூடியூப் உலகின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இந்தியாவில் சுமார் 19,000-க்கும் அதிகமான பயனர்கள் யூடியூப் பயன்படுத்தமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
"Something went wrong\" என்று மட்டுமே திரையில் தோன்றுவதால் பயனர்கள் அவதியுற்றனர். 56% பயனர்கள் செயலி இயங்கவில்லை என்றும், 17% பயனர்களால் இணையதளத்தில் யூடியூப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் டிவியிலும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது. யூடியூப் Recommendation அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முகப்புப் பக்கம் மற்றும் தேடல் முடிவுகளில் வீடியோக்கள் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டது\" என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பல இடங்களில் முகப்புப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடந்து வருவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space