உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மக்கள் அதிகம் நம்பும் இணையத்தளங்கள் மீது மிகப் பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மில்லியன் கணக்கான இணையப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி விவரங்கள் திருடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சைபர் தாக்குதல் வழக்கமான முறையில் நேரடியாக இணையத்தளங்களை முடக்கும் வகையில் நடைபெறவில்லை. மாறாக, ‘சப்ளை-செயின் தாக்குதல்’ எனப்படும் நுட்பமான முறையை ஹேக்கர்கள் கையாண்டுள்ளனர்.

உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் தங்களது இணையத்தளங்களின் செயல்பாட்டைச் சோதிப்பதற்காகப் பயன்படுத்தும் ‘ஆப்டிமைஸ்லி’ என்ற மூன்றாம் தரப்பு மென்பொருள் தளத்தில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அந்தத் தளத்தில் இருந்த மென்பொருள் குறியீடுகளில் ஹேக்கர்கள் தங்களது தீங்கிழைக்கும் மால்வேர் குறியீடுகளைப் புகுத்தியுள்ளனர்.

இதனால், ஆப்டிமைஸ்லி சேவையைப் பயன்படுத்திய 178 முக்கிய நிறுவனங்களின் இணையத்தளங்களுக்குள் பயனர்கள் நுழைந்தபோதே, அவர்களது கணினி மற்றும் கைபேசிகளில் இந்தத் தீங்கிழைக்கும் குறியீடு தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது.

178 நிறுவனங்களைச் சேர்ந்த குறைந்தது 188 இணையத்தளத் திட்டங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ரிப்போர்ட் யூஆர்ஐ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் ஸ்காட் ஹெல்ம் தகவல் வெளியிட்டுள்ளார்.

வங்கிகள், செய்தி இணைய தளங்கள் உள்ளிட்ட பல முக்கிய இணைய தளங்கள் மீத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.