துபாயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறு​வனமான ‘ரிச்கீ பிராப்​பர்ட்​டீஸ்’ தனது நிறு​வனத்​தின் பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்​பிலான ஆடம்​பர லம்போர்கினி உரூஸ் காரைப் பரிசாக வழங்கி ஆச்​சரியப்​படுத்​தி​யுள்​ளது.

ரிச்கீ பிராப்​பர்ட்​டீஸ் நிறு​வனத்​தில் நடா​லியா சாவேஸ் பெண் முகவ​ராக பணி​யாற்றி வரு​கிறார். இவர் இந்த நிறு​வனத்​தில், கடந்த இரண்டு ஆண்​டுகளில் மட்​டும் 500 மில்​லியன் டாலருக்​கும் அதி​க​மான (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.4,750 கோடி) சொத்துகளை விற்​பனை செய்து சாதனை படைத்​துள்​ளார்.

நிறு​வனத்​தின் 3-ம் ஆண்டு விழா​வின் போது, 2026-ம் ஆண்​டின் சிறந்த ஊழியருக்​கான விருதை வாங்​கு​வதற்​காக நடா​லியா சாவேஸ் மேடைக்கு அழைக்​கப்​பட்​டார். விருதைப் பெற்​றுக்​கொண்டு அவர் தனது இடத்​திற்​குத் திரும்ப முற்​பட்​டபோது, நிறுவனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி தாபன் உத்​மான் அவரைத் தடுத்து நிறுத்​தினார்.

“நடா​லியா, எங்கே செல்​கிறீர்​கள்? இத்​துடன் முடிந்​து​விட்​டது என்று நினைக்​கிறீர்​களா? உங்​களுக்​குக் காண்​பிக்க எங்​களிடம் இன்​னொன்​றும் உள்​ளது” என்று கூறி, அரங்​கி​லிருந்த அனைவரின் கைதட்​டல்​களுக்கு இடையே அவருக்​குப் புதிய நீல நிற ‘லம்​போர்​கினி உரூஸ்’ காரை பரிசாக வழங்கி அசத்​தினார்.

இந்த நெகிழ்ச்​சி​யான தருணம் தொடர்​பான வீடியோக்​கள் இன்ஸ்டாகிராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. “ரிச்கீ நிறு​வனத்​தில் சிறப்​பாகப் பணி​யாற்​றினால் என்ன நடக்​கும் என்​ப​தற்கு இதுவே சான்று. பெரிய வெற்​றிகள், பெரிய கனவு​கள். வாழ்த்​துகள் நடா​லியா, இதற்கு நீங்​கள் முற்றிலும் தகுதி​யானவர்” என்று அந்த நிறு​வனம் வீடியோவில் பதிவிட்​டுள்​ளது. துபாயில் இந்த லம்​போர்​கினி உரூஸ் காரின் விலை ரூ.2.3 கோடி முதல் ரூ.4 கோடி ரூபாய் வரை இருக்​கும் என்பது குறிப்​பிடத்​தக்​கது.