என்பிபி ஆட்சியில் இருக்கும் நகர சபையில் பாரிய ஊழல்: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தல்
Ad Space
Ad Space
ஜா-எல நகர சபைக்கு சொந்தமான செக்குவத்த மைதானம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என கூறி அவருக்கு 19 கோடி வழங்கப்படவுள்ளதாக சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,
ஜா-எல நகர சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செக்குவத்த மைதானம் 52 வருடங்களாக ஜா- எல நகர சபைக்கு சொந்தமானது. ஆனால் இப்போது வேறு ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜா-எல நகரசபை 19 கோடி ரூபாவை செக்குவத்த மைதானம் தனக்கு சொந்தம் என குறிப்பிடும் நபருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பிரமரிடம் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதில் பாரிய ஊழல் மற்றும் திருட்டு நடைபெறவுள்ளது. இதை தடுத்து நிறுத்தவும். குறித்த பணம் அவரின் கணக்குக்கு வைப்பிலிடப்படவுள்ளது.
ஜா-எல நகர சபைக்கு 52 வருடங்கள் சொந்தமான மைதானத்திற்கு வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுகிறார் என்ற நோக்கில் பணம் வழங்குவது முட்டால் தனமான செயற்பாடாகும். இதில் பாரிய ஊழல் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space