சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் உட்படத் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்த சர்ச்சைகளால் பதவி விலகிய ஜென்சன் ஹுவாங்கை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிப்பதாக என்விடியா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை (23) அறிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து தாய்பெய் மற்றும் வொஷிங்டன் வரை பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. அவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி எலான் மஸ்க் உட்பட 180,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஹுவாங் மீண்டும் அப்பொறுப்புக்கு வர வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
ஹுவாங்கை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என என்விடியா தலைவர் ஹார்வி ஜோன்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், பணியாளர்கள், பங்குதாரர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அழுத்தங்களைத் தொடர்ந்து பணிப்பாளர் சபை ஏகமனதாகத் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஹுவாங்கின் மீள் வருகையால் தேசியப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பணிப்பாளர் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹுவாங் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்பதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 31 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.
இதேவேளை, இடைக்காலத் தலைவராகச் செயற்பட்ட கொலெட் கிரெஸ் தொடர்ந்து நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியாகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.