எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு
Ad Space
Ad Space
இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதனால் சல்மான் ருஷ்டி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார். அவரை ஹாதி மாதர் (28) என்பவர் கத்தியால் 15 முறை குத்தினார். இதில் சல்மான் ருஷ்டி தனது வலது கண் பார்வையை இழந்தார்.
இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. சல்மான் ருஷ்டியை தாக்கிய ஹாதி மாதர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. நியூயார்க் சிறையில் இருக்கும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Ad Space
Ad Space