“தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி - 2026” ஐ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் போட்டி நடைபெறவுள்ளது. போட்டிப் பிரிவுகள்: ▪️ நாவல் ▪️ சிறுகதை ▪️ கவிதைத் தொகுப்பு ▪️ இளையோர் நாவல் ஒரு போட்டிப் பிரிவிலோ அல்லது அனைத்து பிரிவுகளிலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி திகதி: 30.06.2026 அனுப்ப வேண்டிய முகவரி: கலாசார அலுவல்கள் பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம் (வெளியீட்டுப் பிரிவு), 8வது மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்ல. உறையின் இடது மேல் மூலையில்: “தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி - 2026” என குறிப்பிட வேண்டும்.