ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
Ad Space
Ad Space
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சனிக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த டிப்பர்வாகனம் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கூலர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space