ஹோமாகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரைக் கைது செய்து ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
'ஐஸ்' போதைப்பொருளுடன் எஹெலியகொட நபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space