ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்றும், வெள்ளப் பெருக்கு நிலமைகளுக்கு அதிகாரிகள் ஆயத்தமாக வேண்டியிருக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கிடையில், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் குறிப்பாக அடுத்த சில நாட்களுக்கு மழை உடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறதாகவும் குறிப்பிடுகிறது

அண்மைக்காலமாக ஒப்பீட்டளவில் வறண்ட வானிலை காணப்பட்ட பகுதிகளில், செப்டம்பர் 28-29 ஆம் திகதிகளிலிருந்து ஒக்டோபர் மாதத்திற்குள் பிற்பகல் வேளையில் இடிமின்னலுடன் கூடிய மழை உருவாகத் தொடங்கலாம் என்றும்  கூறப்பட்டுள்ளது.

 முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை உயரக்கூடும் என்பதால், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள், மீன்பிடிச் சமூகத்தினர் மற்றும் கடற்படையினர் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.