வாகன அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய ஒருவரை வெலிமடை பொலிஸார் தம்பவின்ன பகுதியில் வைத்து நேற்று (11) சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின்போது, அதே பதிவு இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிள் குருநாகல் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் போலிப் பதிவு இலக்கச் சம்பவம் தொடர்பாக உண்மைத் தன்மையைக் கண்டறிய அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளும் பெறப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

