ஒவ்​வொரு வீட்​டிலும் புத்​தகங்​கள் இருப்பது அவசியம் என்று முன்​னாள் தலை​மைச் செயலர் இறையன்பு தெரி​வித்​தார்.

சென்னை அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள தனியார் மண்டபத்​தில் நியூ செஞ்​சுரி புத்​தக நிறு​வனத்​தின் பவள விழா அதன் தலை​வர் ஸ்டா​லின் குணசேகரன் தலை​மையில் நேற்று நடை​பெற்​றது. சிறப்பு விருந்​தின​ராக முன்​னாள் தலை​மைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.

இந்த நிகழ்​வில் பங்​கேற்​றவர்​கள் பேசிய​தாவது: இறையன்பு: ஒரு நல்ல பதிப்​பகம் என்​பது புத்​தகங்​களை அச்​சிட்டு விற்​பனை செய்வதுடன் தனது பணியை முடித்​துக்​கொள்ளக் கூடாது. சமூகத்துக்கு ஏற்​றதா, வாசகர்​களுக்​குப் பயனளிக்​குமா, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்​கிறதா என்​பதை ஆராய்ந்து புத்​தகங்​களை வெளி​யிட வேண்​டும். வாசகர்​களின் வாசிப்பு ஆர்வத்தை மேம்​படுத்தும் நூல்​களை வெளி​யிடுவதே நல்ல பதிப்பகத்​தின் அடை​யாளம். புதிய எழுத்​தாளர்​களின் படைப்புகளை​யும் கருத்​துகளை​யும் உல​குக்கு அறி​முகப்​படுத்​தும் பணி​யையும் பதிப்​பாளர்​கள் மேற்​கொள்​கின்​றனர்.

நியூ செஞ்​சுரி புத்​தக நிறு​வனம் 1951-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இத்​தனை ஆண்​டுகளாகத் தொடர்ந்து புத்​தகங்​களை வெளி​யிட்டு வரு​வது பாராட்​டுக்​குரியது. புத்​தகங்​கள் என்​பது வெறும் வாசிப்​புப் பழக்​கத்​துக்​கானவை மட்​டுமல்ல; ஒவ்வொரு வீட்​டிலும் இருக்க வேண்​டிய அறி​வுச் செல்​வ​மாகும். புத்தகங்​கள் இல்​லாமல் மனித வாழ்க்​கையை முழு​மையாக வாழ முடி​யாது.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் வீர​பாண்​டியன்: புத்தகங்​களை வெளி​யிடுவது என்​பது வெறும் வணிக நடவடிக்கை அல்ல. சமூக மாற்​றத்​துக்​கான சிந்​தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்​கும் பணி​யாகும். உல​களாவிய விடுதலைச் சிந்தனைகள், சிறிய நூல்​கள், பெரிய நூல்​கள் எனப் பல்​வேறு படைப்​பு​களைத் தமி​ழில் வெளி​யிட்டு வாசகர்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தில் நியூ செஞ்​சுரி புத்​தக நிறு​வனம் முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது.

பபாசி தலை​வர் சண்​முகம்: பதிப்​பகங்​கள், எழுத்​தாளர்​கள், புத்தக விற்​பனையாளர்​கள் மற்​றும் வாசகர்​கள் இணைந்து செயல்​படும்​போது​தான் புத்​தக உல​கம் மேலும் வளர்ச்​சி​யடையும். எனவே, புத்​தகத் திரு​விழாக்​கள் மூலம் வாசிப்​புப் பழக்​கத்​தையும் தமிழ்ப் பண்​பாட்​டையும் வளர்க்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் பேசினர். நியூ செஞ்​சுரி புத்​தக நிறு​வனத்​தின் இயக்​குநர்​களான சுப்​பராயன் எம்.பி., இரா.முத்​தரசன், பழனிசாமி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.