கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்
vidiyel 27 மாசி 2026 · 15:52 1 views
Ad Space
Ad Space
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.