அனு​ம​திக்​கப்​ப​டாத மற்​றும் ஆபத்​தான பாதை​யில் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளி​யேற முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல், கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்​துச் சிதறி தீப்​பற்​றியது.

இதுகுறித்து ஈரானுக்கு சொந்​த​மான இஸ்​லாமியப் புரட்​சிகர காவல்​படை (ஐஆர்​ஜிசி) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: கச்சா எண்​ணெய் ஏற்​றப்​பட்ட பிரம்மாண்டமான சூப்​பர்​டேங்​கர் கப்​பல் ஒன்று அனுமதிக்கப்படாத மற்​றும் ஆபத்​தான பாதை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தியை விட்டு வெளி​யேற முயன்​றது. அப்​போது, அந்​தக் கப்பல் கடல் கண்​ணிவெடி மீது மோதி வெடித்​துச் சிதறி தீப்பற்றியது.ஜலசந்​தியை விட்டு வெளி​யேற முயன்​ற​போதும், கடல் கண்ணிவெடி மீது மோது​வதற்கு முன்​பும், அந்த கப்​பல் தனது வழி​செலுத்​தல் மற்​றும் உலகளா​விய இருப்​பிடக் கட்​டுப்​பாட்டு அமைப்​பு​களை (ஜிபிஎஸ்) அணைத்​து​விட்​டது. ஹார்​முஸ் ஜலசந்தியின் பாது​காப்​பை​யும் விதி​முறை​களை​யும் மீற முயலும் எந்​தவொரு எண்​ணெய் கப்​பலுக்​கும் மிகப்​பெரிய தீ காத்திருக்கிறது.

அனு​ம​திக்​கப்​ப​டாத பாதைகளைப் பயன்​படுத்​தும் கப்​பல்​களுக்கு எதி​ரான நடவடிக்கை ஹார்​முஸ் ஜலசந்​தி​யோடு மட்​டும் நின்றுவிடாது. ஒட்​டுமொத்த பிராந்​தி​யத்​தி​லும் அவை பின்​தொடரப்​பட்டு தண்​டிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஈரான் மீது கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்​தது. இதையடுத்​து, உலக நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் கப்​பல் பயணிக்​கும் முக்​கிய கடல்​வழி​யான ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. ஐஆர்​ஜிசி​யின் கட்டுப்பாட்​டில் உள்ள அப்​பகு​தி​யில் கடல் கண்​ணிவெடிகள் வைக்கப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.