கடப்​பாக்​கம் அடுத்த ஆலம்​பரகுப்​பம் மீனவர் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்​கிய ராக்​கெட் வடி​வி​லான மர்​மப் பொருளை போலீ​ஸார் மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் மீட்டு பரிசோதனைக்​காக கொண்டு சென்​றனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், இடைக்​கழிநாடு பேரூராட்​சிக்கு உட்​பட்ட கடப்​பாக்​கம் அடுத்த ஆலம்​பரகுப்​பம் மீனவர் பகுதி கடற்​கரையில் இரும்​பாலான ராக்​கெட் வடி​வி​லான மர்​மப் பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்​கியது.

இதைப் பார்த்த, மீனவர்​கள் உடனடி​யாக போலீ​ஸார், வரு​வாய்த் துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர். சம்​பவ இடத்​துக்கு விரைந்து வந்த அதி​காரி​கள் மர்​மப் பொருளை மீட்டு பரிசோதனைக்​காக கொண்டு சென்​றனர்.

மேலும் கரை ஒதுங்​கிய மர்​மப் பொருள் ஒத்​தி​கைக்​காக ஏவப்​பட்ட ராக்​கெட் அல்​லது ஏதேனும் கப்​பலின் உதி​ரிப் பாக​மாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ள​தாகவும், முறை​யான பரிசோதனைக்கு பிறகே முழு​மையான தகவல்​கள் கிடைக்​கும் எனவும் போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.