கடற்பகுதியில் 300 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றல்!
Ad Space
Ad Space
மாரவில கடற்பகுதியில் சுமார் 300 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை படகு ஒன்று மாரவில கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான சாக்கு மூடைகளைக் கண்டுபிடித்துள்ளது.
குறித்த பகுதியில் கடற்படை கண்காணிப்பு அதிகரித்ததால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த இலைகள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.
அவை, சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திலுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space