ஹிக்கடுவை கடற்கரையில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட35 வயதுடைய  பெலாரஸ் நாட்டுப் பெண் ஒருவர், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் மூன்று உத்தியோகத்தர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரையோரப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான மிஹிந்து, நிப்புன் ஆகிய மூவரும் இணைந்து, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த வெளிநாட்டுப் பெண்ணை விரைந்து செயற்பட்டு மீட்டுள்ளனர்.

கரைக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஆரம்பகட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் பின்னர், அவர் அவரது பாதுகாவலர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.