கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி!
Ad Space
Ad Space
பதுளை - பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீவலி கல்லூரிக்குச் செல்லும் துணை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான வீதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஒரு கட்டிடத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space