கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போல்கஹவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று வியாழக்கிழமை  (26) அதிகாலை போல்கஹவத்த பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகமை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 245 கிராம் 'ஐஸ்'  போதைப்பொருள்,205 கிராம் 'குஷ்'  போதைப்பொருள்  என்பன போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.