கண்டி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
Ad Space
Ad Space
கண்டியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி வாவியில் ஆணொருவர் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (31) மதியம் குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் 05 அடி 06 அங்குல உயரமும், குட்டையான சுருள் முடி கொண்ட ஒருவர் எனவும், நீல நிற சட்டை மற்றும் கருப்பு நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
நீதவானின் பரிசோதனைக்குப் பின்னர், சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Ad Space
Ad Space